மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஒத்தையால் ஊராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின்(சுகாதார நிதி) கீழ், ரூ.36 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும், ஒத்தையால் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், ரூ.1.30 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து உறிஞ்சுக்குழியையும், ஒத்தையால் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.7.40 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், ஓ.மேட்டுப்பட்டி ஊராட்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும்,ஓ.மேட்டுப்பட்டி ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணியினையும்,பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32,000ஃ- மதிப்பில் கட்டுப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி கழிப்பறை கட்டடத்தையும்,
எ.ராமலிங்காபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.25.40 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.6.05 இலட்சம் மதிப்பில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.இரா.தண்டபாணி, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.