“இவர்களுக்கு” ரூ 1000 உரிமை தொகை கிடைக்காதா? தகுதியானவர்கள் யார்?

ரேஷன் கார்டு இருந்தாலும் “இவர்களுக்கு” ரூ 1000 உரிமை தொகை கிடைக்காதா? தகுதியானவர்கள் யார்?
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக தனது தேர்தல் அறிக்கையில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. அந்த வகையில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ 4000 உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.பெட்ரோல் விலை குறைப்பு உடனடியாக அறிவிக்காவிட்டாலும் 2022- 2023 தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது போல் நீட் தேர்வு ரத்து, டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை உள்ளிடட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.இந்த நிலையில் ரூ 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் தமிழக அரசோ தற்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் வரை செய்து முடித்துவிட்டோம். மீதமுள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக செய்து முடித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசனையையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *