திருச்சி: தஞ்சையில் ராஹத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிய கரூரை சேர்ந்த வாலிபரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். ராஹத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்ற பஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் தனது நிறுவனத்தில் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் தருவதாக கூறி, மாநிலம் முழுவதும் ஏஜென்டுகள் மூலம் பலரிடம் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்துள்ளார்.
ராஹத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த
