அறிவியல் இயக்கம் சார்பில்புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 இடங்களில் வாசிப்பு இயக்கம்.புதுக்கோட்டை, மார்ச்.11:- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் 100 இடங்களில் தொடர் வாசிப்பு இயக்கம் நடத்துவது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீரமானித்துள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.வீரமுத்து தலைமையில் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாநில துணைத் தலைவர் மாணிக்கத்தாய், மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிரு~;ணன் ஆகியோர் பேசினர். பொதுக் குழு உறுப்பினர் அ.மணவாளன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவுன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் ஆகியோர் பேசினார். தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் அண்டனூர் சுராவை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.மாவட்டம் முழுவதும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் விதமாக பிரச்சார பயணங்களை மேற்கொள்வது, ஏப்.23 சர்வதேச புத்தக தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் ஏப்ரல் மாதம் 100 இடங்களில் தொடர் வாசிப்பு இயக்கத்தை நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராம் அனைவரையும் வரவேற்க, பொருளாளர் விமலா அனைவருக்கும் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 இடங்களில் வாசிப்பு இயக்கம்.
