புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
கூட்டம் 27.04.2023-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட
ஆட்சியரகக் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் லைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின்ரூபவ் விவசாயம்
சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.
எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய
கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டத்தில்
கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும்; முகக்கவசம் அணிந்து
சமூக இடைவெளி விட்டு கூட்டத்தில் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட
ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
