மகப்பேறு சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து,சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

திருவில்லிபுத்தூர்  அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து,  பிரசவ தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.பின்னர், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தாய்மார்களுக்கு வழங்கப்படும் படுக்கை வசதியை சாய்தள சிறப்பு படுக்கை வசதியாக ஏற்படுத்தி தருவதற்கு அறிவுறுத்தினார். இதன் மூலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வசதியாக இருக்கும் என்று அறிவுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பரிவு, அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும், டயாலிசிஸ் பிரிவிற்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, புதிதாக சுமார் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், புதிதாக ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரத்த வங்கி கட்டடத்தை ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, அறுவை சிகிச்சை அரங்கம், எலும்பு முறிவு பிரிவு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை , சிறுநீரக அறுவை சிகிச்சைகள் ஆகிய பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.பின்னர், இன்று அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை புரிந்த வயிற்றில் ஓட்டை விழுந்த நபருக்கும், குடல்வாழ்வு அழுகிய நிலையில் இருந்த நபருக்கும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதற்கு உத்தவிட்டார். அதனடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது,  இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.முருகவேல், திருவில்லிபுத்தூர் அரசு தலைமை மருத்துவர் மரு.காளிராஜ், மருத்துவர்கள், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.ரெங்கசாமி, செவிலியர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *