பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரிஉள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகரில் அத்தியாவசியப் பணிகளான குப்பைஅகற்றுதல், நோய்த்தடுப்பு பணிகள், பூங்காக்கள், சாலைகள், தெருவிளக்குகள்,
மழைநீர் வடிகால்கள் முதலியவற்றை அமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்றபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.2022-23ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான (2/2022-23)சொத்துவரியினை 09.03.2023 வரை 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சொத்துஉரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை முழுமையாக செலுத்தி, சென்னைமாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்கு பங்களித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி, சொத்து வரியினை
சொத்து உரிமையாளர்கள், ஒவ்வொரு அரையாண்டுகளின் தொடக்கத்தின் முதல்15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் சொத்துஉரிமையாளர்களுக்கு 5 சதவீதம் (அதிகப்பட்சம் ரூ.5,000 வரை) ஊக்கத்தொகைவழங்கப்பட்டு வருகிறது. தாமதமாக செலுத்தும் சொத்து உரிமையாளர்கள்,தாங்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி
சேர்த்து செலுத்த வேண்டும்.பெருநகர சென்னை மாநகராட்சியானது, சொத்து உரிமையாளர்கள் எளிதில்சொத்துவரியினை செலுத்திட ஏதுவாக கீழ்க்கண்ட வழிவகைகளைஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை,தங்களது இல்லம் தேடி வரும் அரசு தபால் துறை ஊழியரிடம் BBPS மூலம்செலுத்துவதற்கும், வரிவசூலிப்பாளரிடம் காசோலை/வரைவோலை மற்றும்கடன்/பற்று அட்டைகள் வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின்அனைத்து மண்டல அலுவலக வளாகத்திலுள்ள இ/சேவை மையங்கள் மூலமாகவும்,தங்களது இல்லங்களில் இருந்தபடியே சென்னை மாநகராட்சி இணையதளம்மற்றும் பேடிஎம் (paytm), நம்ம சென்னை ஆகிய கைபேசி செயலிகள் மூலம்பரிமாற்ற கட்டணம் ஏதுமில்லாமலும், பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS).NEFT/RTGS ஆகிய முறைகளிலும் எளிதாக செலுத்த இயலும்.எனவே, 2022-23ஆம் நிதியாண்டு வருகிற 31.03.2023 அன்றுடன் நிறைவுபெற உள்ள நிலையில், சொத்துவரியினை சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட
சொத்து உரிமையாளர்கள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். நடப்புநிதியாண்டு முடிவடைய இன்னும் 18 தினங்கள் மட்டுமே உள்ளதால், சொத்துஉரிமையாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியசொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி சென்னை மாநகரின்அடிப்படைக் கட்டமைப்பினை மேம்படுத்திட தங்களது பங்களிப்பினை
அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரி உள்ளது
