மாமேதை மார்க்ஸ் நினைவு தினம். உறுதியேற்பு.

மாமேதை மார்க்ஸ் நினைவு தினம். உறுதியேற்பு.புதுக்கோட்டை, மார்ச்.14:- மாமேதை காரல் மார்க்சின் 140-ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டதோடு ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.மாமேதை காரல் மார்க்சின் 140-ஆண்டு நினவுதினம் மார்ச்; 14 செவ்வாய்க்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அவரது கொள்கையைப் பின்பற்றுபவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்போடு, மதவெறி பாசிச எதிர்ப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. அதனொரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்நிகழ்வுகளில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், என்.பொன்னி, கே.சண்முகம், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்;த்தனன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.