இந்திய மாணவர் சங்க மாணவிகள் மாநாடு வலியுறுத்தல்

அனைத்துக் கல்லூரிகளிலும் உள் புகார் கமிட்டிஇந்திய மாணவர் சங்க மாணவிகள் மாநாடு வலியுறுத்தல்புதுக்கோட்டை,  மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்துக் கல்லூரிகளிலும் உள் புகார் கமிட்டி (ஐசிசி) அமைக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் மாணவிகள் மாநாடு வலியுறுத்தி உள்ளது.இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவிகள் மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பிரியங்கா தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வை~;ணவி வரவேற்றார். எஸ்.மகாலெட்சுமி கொடியேற்றினார்.மாநாட்டைதொடங்கிவைத்துதமுஎகசமாவட்டக்குழுஉறுப்பினர்மைதிலிகஸ்தூரிரெங்கன்உரையாற்றினார்.மாநாட்டை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன், தலைவர் ஏ.சந்தோ~;குமார் ஆகியோர் பேசினர். எதிர்கால திட்டமிடல் குறித்து மாணவிகள் உபகுழு மாவட்டக் கன்வீனர் ரெ.கார்த்திகாதேவி பேசினார். மாநாட்டை நிறைவுசெய்து மாநில செயற்குழு உறுப்பினர் மி.காவ்யா உரையாற்றினார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.நந்தனா நன்றி கூறினார்.
மத்திய, மாநில அரசுகள் பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் சாணிடரி நாப்கின் வசதியும் அதனை எரியூட்டுவதற்கான எந்திரமும் வழங்க வேண்டும். பள்ளி பாடப் புத்தகங்களில் உளவியல் ரீதியிலான கருத்துக்களை இணைக்க வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்துக் கல்லூரிகளிலும் உள் புகார் கமிட்டி (ஐசிசி) அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *