இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி.

விருதுநகர் மாவட்டம் மருளுத்து கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி
கற்பிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் மருளுத்து கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு
கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  வீ.ப.ஜெயசீலன்
இன்று(19.04.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று
முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம்
தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் ரூசூ39;இல்லம் தேடிக்
கல்விரூசூ39; மையங்களில் கற்பித்தல் சேவை தன்னார்வலர்கள் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவரூபவ்
மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படிரூபவ் மருளுத்து கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி
கற்பிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு செய்து கற்பிக்கும் முறைகள்
குழந்தைகளின் வாசிப்புத்திறன்ரூபவ் எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளிடம்
கேட்டறிந்தார். மேலும் மாணவர்கள் கல்வி கற்க வசதியாக மின்சார விளக்கு வசதி செய்து தர சம்மந்தப்பட்ட
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *