ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆஸ்கார் விருதுபெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற திரு. பொம்மன்,திருமதி பெல்லி தம்பதியர்களை பாராட்டி தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கானகாசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று(15-3-2023) தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில்எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில்இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான திரு. பொம்மன்,திருமதி பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும்அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும்யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ளஇரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும்ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள்பணி புரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும்தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கைவழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும்,யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்குஇசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதிஉதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள்காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும்அரசுஅறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *