விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை
உருவாக்கக்கோரி ஆர்ப்பாட்டமபுதுக்கோட்டை, மார்ச்.16:- தமிழக அரசு விவவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார் மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் முன்னிலைல வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநில பொருளாளர் அ.பழநிசாமி கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் மற்றும் விதொச நிர்வாகிகள் எம்.சண்முகம், கே.சித்திரைவேல், எஸ்.பெருமாள், பி.ராமசாமி, ஆர்.சக்திவேல், எம்.ஜோ~p உள்ளிட்டோர் பேசினர். உயர்வு, வேலையின்மை, வறுமை உள்ளிட்ட நெருக்கடியால் தள்ளப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு கேரள அரசைப் போல கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு விவவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். வீடின்றி தவிக்கும் ஏழைகளுக்கு மனைப்பட்டாவும், இலவச வீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
