பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் புதுவை பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்
புதுவை பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செயதுள்ளார் . முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய சில அறிவிப்புகள் பின்வருமாறு,
*புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.*தமிழ்வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.*பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும்.*புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும்.*கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து  அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும்;*மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அட்டவணை இனப்பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.*புதுச்சேரியில் 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.*சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்.*மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*மின்துறைக்கு ரூ.1,946 கோடியும், மின் சிக்கனத்தை கடைபிடிக்க ரூ. 4.6 கோடியில் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.