சென்னை: இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுகதான் ஆளவேண்டும் என மக்கள் எண்ணும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்கலைஞர் எனக்கு முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாதுரை. திமுக ஆட்சிக்கு வந்தால் விழுந்து கிடக்கும் தமிழ்நாடு எழுந்து நிற்கும் என்று நினைத்தார்கள். 2 ஆண்டுக்கு முன் மே 7-ம் தேதி ஆட்சிப்பொறுப்பேற்றேன். இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுகதான் ஆளவேண்டும் என மக்கள் எண்ணும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம். ஆட்சிக்கு வந்தபோது மிகவும் மோசமான நிதிநெருக்கடி இருந்தபோதிலும் மகத்தான சாதனை புரிந்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் திமுக அரசு ஏதாவது ஒரு உதவி செய்து வருகிறது என்றார்.விலையில்லா பேருந்து பயண திட்டம் மூலம் இதுவரை 265 கோடி விலையில்லா பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர் மாதம் முதல் ஒரு கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற உள்ளனர். மக்களுக்கு நேரடியாக தினமும் பலன் தரும் அரசாக திமுக அரசு உள்ளது. காலை சிற்றுண்டி, இலவச பேருந்து மூலம் மக்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். திமுக ஆட்சி பற்றி யார் எது கூறினாலும் மக்கள் மனதை மாற்ற முடியவில்லை என முதலமைச்சர் குறிப்பிட்டார்.இது ஸ்டாலினின் அரசோ, திமுக என்ற அரசோ இல்லை, இது ஒரு இனத்தின் அரசு, கொள்கையின் அரசு, 8 கோடி மக்களின் அரசு. மக்கள் நல அரசாகவும் இருக்க வேண்டும், கொள்கை அரசாகவும் இருக்க வேண்டும். திமுக அரசு இந்தியாவையே ஈர்க்கும் அரசாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தவறுகளை சுட்டிக்காட்டுதாக எதிர்க்கட்சி இல்லை என்றாலும் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டை நிரந்தரமாக தி.மு.க.தான் ஆளவேண்டும் என மக்கள் எண்ணும் வகையில் ஆட்சி நடைபெருகிறது என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்
