மாணவியர்களுடனான ‘Coffee With Collector”  

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (10.03.2023) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாநில அளவில் கலந்து கொண்டு, நடனம், நாடகம், இசைக் கருவி வாசித்தல், கட்டுரை எழுதுதல், விவாத மேடை பட்டிமன்றம், மொழித்திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு; வெற்றி பெற்ற  மாணவ, மாணவியர்களுடனான ‘Coffee With Collector”  என்ற 27 – வது கலந்துரையாடல்  நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில்  கல்வி,  பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில்  மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 27 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது,அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விண்வெளி வீரர், வழக்கறிஞர், வானவியல், இராணுவம் உள்ளிட்;ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான தனித்திறமைகளை கண்டறிந்து, அத்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எந்த ஒரு பணியில் இருந்தாலும், அத்தனித்திறமைகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  தனித்திறமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்;கென்று தனியாக நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டும். உழைப்பினால் முடியாதது ஒன்றுமில்லை.
எனவே, ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்;ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *