எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.இந்நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
