8 மணியில் இருந்து 12 மணி நேரமா? பரிசீலனை செய்க: தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணி நேரமா? பரிசீலனை செய்ய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், பணி நேரம் 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக மாற்ற சட்டம் நிறைவேற்றியதை பரிசீலனை செய்ய வேண்டும். பணி நேரத்தை 8 – 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல, வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நலம், குடும்ப நலம் கவனிக்கப்படவேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். விரும்பியோர் 12 மணி நேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே. எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் திராவிட மாடல் நல்லரசுக்கு ஏற்படக்கூடிய அவப்பெயரை தவிர்க்க வேண்டும். தவிர்க்கப்படும் – மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதியாகவே நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *