364 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 3,464 பயனாளிகளுக்குரூ.6.60 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 33 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 369 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் இன்று(15.03.2023) கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தள்ளுபடிச் சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 364 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 3,464 பயனாளிகளுக்கு ரூ.6.60 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 33 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 369 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.அதன்படி, அருப்புக்கோட்டை சுப்புராஜ் மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 201 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 1861 பயனாளிகளுக்கு ரூ.3.57 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 14 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 158 பயனாளிகளுக்கு ரூ.99 இலட்சம் மதிப்பிலான புதிய கடனுதவிகளையும்,சாத்தூர் எஸ்.கே.பேரடைஸ் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், சாத்தூர் மற்றும் வெம்பக்;கோட்டை வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 163 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 1603 பயனாளிகளுக்கு ரூ.3.03 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 19 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 211 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும்,என மொத்தம் 364 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 3,464 பயனாளிகளுக்கு ரூ.6.60 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 33 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 369 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்ளும் போது, ஒரு மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் 10 தையல் இயந்திரங்கள் வைத்து, அருகில் உள்ள பெரிய நிறுவங்களிடம் பணிகளை பெற்று, தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் இதற்கு முன்னாள் இல்லத்தரசியாகவும், கிடைத்த சிறு வேலைகளையும், தனியாக வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தனர். பின்னர் குழுக்கடன் மூலம் 5 தானியங்கி இயந்திரங்களை வாங்கி, தனியாக தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். கடனுதவி என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், அதன் மூலம் அவர்கள் பொருளாதாரம் உயர்வதையும் நேரடியான பார்த்து, அறிந்து எடுத்துக்காட்டாக காணமுடிந்தது. இதுபோன்ற குழுக்களின் நம்பிக்கையும், குழுக்களுக்கு அரசு தரக்கூடிய கடன்களும் தான் மகளிர்களுக்கு வருமானத்தை ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்கிறது.ஒரு காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட சம உரிமைகள் இல்லாமல் இருந்தது. பல்வேறு தலைவர்களின் சமூக, அரசியல், நீதிமன்ற போராட்டங்கள் மூலம் பெண்களுக்கான சம உரிமையை பெற்றுத்தந்தார்கள். அதுமட்டுமல்லாது பெண்களின் உண்மையான முன்னேற்றம் என்பது அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைவது தான். அவர்கள் கையில் இருக்கும் பணத்தை செலவிடுவதற்கும், செலவிடுவதற்கான பணத்தை சம்பாதிப்பதற்குமான உரிமை மூலம் பொருளாதார தற்சார்பு, தன்னிறைவு பெற்று பொருளாதாரத்தில் மேம்படுவது தான் உண்மையான பெண்களுக்கான விடுதலைஅதனடிப்படையில்தான், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களில் ஒன்றாக மகளிர் சுய உதவிக்குழுக்கு கடன்களை வழங்கி வருகிறது. மேலும், கொரோனா போன்ற காலகட்டத்தினால் பொருளாதார பாதிப்படைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதிய கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதிய தொழில்களை தொடங்கி, தனிநபர்கள் உழைப்பையும், திறமையையும் பயன்படுத்தி பொருளாதாரத்தில் மேன்மையடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பெண்களுக்கான உரிமை, கல்வி, விதவை மறுமணம், சொத்துரிமை உள்ளிட்ட பெண்களுக்கான சமத்துவம் கிடைக்க பல்வேறு சமுதாய சீர்திருந்தங்களை செய்தவர்கள். அவர்கள் வழி வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கும், சமத்துவதிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.மகளிர் சுயஉதவிக் குழுவை உருவாக்கியவர்; கலைஞர் அவர்கள். முதன்முதலில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். எவ்வித அடமானம் இல்லாமல் ரூ.20 இலட்சம் வரை கடன் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- ஆகிய திட்டங்களுடன், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள் என அனைவரும் மக்களுக்கான பணியில் இரவு, பகல் பார்க்காமல் ஓடோடி உழைக்கக் கூடிய அரசாக இருக்கிறது.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கும் பட்சத்தில் அதனை செய்துதர அமைச்சர்களாகிய நாங்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான மாவட்ட நிர்வாகமும், தயாராக உள்ளது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிப்படி, விருதுநகர் மாவட்டத்தில் 1195 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 19,132 பயனாளிகளுக்கு ரூ.32.77 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் புதிய கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே வழங்கப்படும் புதிய கடனுதவிகளை பெற்று பெண்கள் பொருளாதார முன்னேற்ற அடைய வேண்டும்.பெண்களின் உரிமைக்காகவும், மேம்பாட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர், திரு.பா.செந்தில்குமார், கோட்டாட்சியர்கள் திரு.கல்யாணகுமார், திருமதி அனிதா, சாத்தூர் நகர் மன்றத்தலைவர் திரு.குருசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி நிர்மலா கடற்கரைராஜ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
364 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 3,464 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி
