35 ஆண்டுகளாக குடியிருக்கும் காலனி வீடுகளுக்கு பட்டா வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

35 ஆண்டுகளாக குடியிருக்கும்காலனி வீடுகளுக்கு பட்டா வழங்க சிபிஎம் வலியுறுத்தல்புதுக்கோட்டை, மார்ச்.14:- 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு பட்டியல் இன மக்களின் காலனி வீடுகளுக்கு மனைப்பட்ட வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர். இதுகுறித்து இரும்பாநாடு பட்டியல் இன மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வே.வீரையா ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது:நாங்கள் ஆவுடையார்கோவில் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பாநாடு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திராகாந்தி கூட்டுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 20 காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீட்டிற்கான வீட்டுவரி, மின் கட்டனங்களை தொடர்ந்து செலுத்தி வருகிறோம். இந்த வீட்டு முகவரியில்தான் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெற்றுள்ளோம்.மேற்படி நாங்கள் வசிக்கும் காலனி வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2004-ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். இதுநாள் வரை எங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுமனைக்கான இடம் தற்பொழுது வேறொரு தனிநபரின் பெயரில் பட்டா ஏற்பட்டுள்ளது.மேற்படி வேறொரு தனிநபரின் பட்டாவை உடனடியாக ரத்துசெய்வதோடு 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் பெயரில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *