தொழில் கடன் பெற்றுத் தருவதாக சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் பத்திரிகைகளில் கவர்ச்சிகர விளம்பரம் செய்தார். இதை நம்பி ரூ.4 கோடி கடன் பெற்றுத் தரக் கோரிய பிரபல ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.5 லட்சத்தை கமிஷனாக பெற்றுக்கொண்ட சுரேஷ்குமார் தலைமறைவானார். இதுகுறித்த புகாரின்பேரில் இவரை காவல் துறையினர் கைது செய்தனர்.