உலகின் பல நாடுகளில் கொரோனா குறைந்து வரும் நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,006 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 791 பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.