ஆன்லைன் சில்லறை வணிக நிறுவனமான அமேசான் துணிகளை விற்பனை செய்து வரும் தனது துணை நிறுவனமான பேப்ரிக்.காம் சேவையினை திடீரென நிறுத்தியுள்ளது. செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், துணிகளை இனி அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவினால் பலரும் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.