தமிழ்நாடு முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று

தமிழ்நாட்டில் இன்று

முக்கிய செய்திகள்

சென்னை: 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேரை முதல்வராக பதவி உயர்வு அளித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 27 அரசு கலைக்கல்லூரிகளும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும். பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகரில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை ஊத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழந்தனர். நிவேதா என்பவரை பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. நிவேதா, அவரது வயிற்றில் இருந்த சிசு, உடன் சென்றா தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்: வெளிமாநிலங்களில் இருந்து பர்மிட் இல்லாமல் வந்த 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் பாலக்கரையில் இன்று அதிகாலை மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஆய்வின் போது பர்மிட் இல்லாமல் வந்த 4 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தார்

மயிலாடுதுறை: மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நிற்காமல் சென்றதால் சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் மயிலாடுதுறை மீனவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, டிஜிபி சைலேந்திர பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் பனியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக டிஜிபி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும்  11 -வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 7 மணி நிலவரம்படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள டீ-கடையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரனமாக தீப்பிடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்தில் படுகாயமடைந்த டீ-கடை ஊழியர்கள் ஜான், குட்டி ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்: முதலைப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கே சென்ற நாய் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக திடீரென பிரேக் போட்டதில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகளை அழைத்து வரச் சென்ற வாலாஜாபாத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராதா உயிரிழந்தார்

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *