பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

தமிழ்நாட்டில் இன்று
தமிழ்நாட்டில் இன்று
தமிழ்நாட்டில் இன்று

திருவள்ளூர் கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அருகே ரூ.10.83 கோடி செலவில் மதகுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன.

கோவை நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் போன்று போலியாக ட்விட்டர் பக்கம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் செயலியினை பதிவிறக்கம் செய்து கோவை சிட்டி போலீஸ் என்ற பெயரில் லாகின் செய்த மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 20 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர்

சென்னை புரசைவாக்கத்தில் செல்போன் வாங்குவதற்கு பணம் கேட்டு, தாய் தராததால், அஜித் (22) என்ற இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் இருந்த சானிடைசரைக் குடித்த அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்: கனமழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியை சேர்ந்த 12 வயது சிறுமியை, சுப்பிரமணி என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி பாலியல் வன்கொடுமை!
சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு!

தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு ஆணை 2 ஆவது முறையாக நிரம்பியதால் அணைக்கு வரும் 28,000 கன அடி உபரி நீர் அப்படியே திறப்பு!
சின்னாறு கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே டிராக்டரில் மேஜைகளை ஏற்றி அதனை பிடித்தவாறு அரசு பள்ளி மாணவர்களை ஆபத்தான பயணம் செய்ய வைத்த சம்பவம்!
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 1000 இருந்து ரூ.5000 உயர்த்தி வழங்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மெரினா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது

திருப்பத்தூர்
சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் கனமழையால் உருண்டு விழுந்த பாறைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை

ராமநாதபுரம் சாயல்குடியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய தானியங்களிலிருந்து சுவைமிகு பலகாரங்கள் தயாராகி வருகின்றன.

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் முகாமிட்டு சுற்றித்திரியும் யானைகள்: பாதுகாப்போடு இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் மாதாந்திர குலுக்கலில் தேர்வுபெற்ற 30 பயணிகளுக்கு பரிசுகளை வழங்கினார் ராஜேஷ் சதுர்வேதி

செங்கல்பட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நினைவாக 2 குளங்கள் சீரமைக்கப்படும் பணியை மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு மெற்கொண்டார்.

திருவண்ணாமலை காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அழகான பெண்களுடன் உல்லாசம்: ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.7 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவர் குறித்து விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *