சென்னையில் தடையை மீறி சரவெடி பட்டாசுகள் விற்பனை?
தீபாவளியையொட்டி சரவெடிகளை வெடிக்கக் கூடாதென உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்யும் சில கடைகளில் தடையை மீறி 10,000 வாலா சரவெடிகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தீவுத்திடல் கடைகளில் சரவெடி பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.