தருமபுரி மாவட்டத்தில் ராகி அதிகமாக பயிரிடுவதால் மத்திய அரசினால் தருமபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ ராகி வழங்குவதாக தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்புகளை வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் மாவட்டத்தின் மொத்த பரப்பு 3.42 லட்சம் ஹெக்டேர் ஆகும். மொத்த சாகுபடி பரப்பான 2.48 லட்சம் ஹெக்டேரில், 1 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசன பயிராகவும், 1,47,876 ஹெக்டேரில் மானாவாரி பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ராகி பயிரையும் அதிகமாக விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.மாவட்டத்தில் ராகி பயிரிடும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 67 ஆயிரத்து 505 ரேஷன் அட்டைதாரர்களில் ஏ.ஏ.ஒய், பி.எச்.எச் அட்ைடதாரர்கள் என 2,96,872 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் மாதம் 2 கிலோ ராகி வழங்குவதாக திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், அரூர் ஆகிய 3 இடங்களில் மாதம் 440 டன் இலக்கா வைத்து நேரடி ராகிக் கொள்முதல் நிலையங்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதம் 600 டன் இலக்கா வைத்து 6 கொள்முதல் நிலையங்களும் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.இந்த நிலையில் தருமபுரி ராகி நேரடி கொள்முதல் நிலையத்தில் 23 ஆயிரம் டன் ராகி மட்டும் கொள்முதல் செய்த மாவட்ட நிர்வாகம் நேரடி கொள்முதல் நிலையங்களை 2 மாவட்டங்களிலும் இழுத்து மூடிவிட்டது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட வளங்கள் அலுவலர் கூறும் போது 2,96,872 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ராகி வழங்க கர்நாடகா மாநிலத்தில் ராகி கொள்முதல் செய்வதாக தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 92 சதவீதம் உள்ள 1,75,794 சிறு குறு விவசாயிகள் ஆவார். மாவட்டத்தில் நடப்பாண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மொத்தம் 2,14,249 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் ராகி 14,143 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அதனால் மாவட்டத்தில் போதுமான ராகி விளைச்சல் இல்லாததால் கர்நாடகா மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்தார் இதுகுறித்து விவசாய தொழிற்சங்க பிரதிநிதி பிரதாபன் கூறும்போது: தருமபுரி மாவட்டத்தில் ராகியை கொள்முதல் செய்து மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனை தமிழக அரசு பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது. ஆனால் ராகி உற்பத்தி செய்யக்கூடிய நமது மாவட்டத்தில் கொள்முதல் செய்யாவில்லை. தற்போது உள்ள கொள்முதல் நிலையங்கள் வெறுமனே பெயரளவில் தொடங்கி வைத்து விட்டு கொள்முதலிலே வெறும் 23½ மெட்ரிக் டன் ராகியை மட்டுமே கொள்முதல் செய்துள்ளனர். மீதியை கொள்முதல் செய்வதாக அறிவிப்புகள் வெளியிட்டிருப்பது ஏமாற்று வேலையாகும்.தருமபுரி மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் சிறுதானியம் ராகி விவசாயம் செய்கின்றனர். அந்த உற்பத்தி செய்யக்கூடிய சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தை கொடுத்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏ.ஏ.ஒய், பி.எச்.எச் 3 லட்சம் குடும்ப கார்டுகளுக்கு 2 கிலோ என்றால் கூட மாதம் 5 லட்சம் கிலோ ராகி விநியோகம் செய்யப்பட வேண்டும். வருடத்திற்கு 72 லட்சம் கிலோ ராகியை விவசாயிகள் இடத்தில் கொள்முதல் செய்யதால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள். அதை விட்டுவிட்டு இன்று வேறு மாநிலத்தில் ராகி கொள்முதல் செய்வதாக அறிவிப்பு வந்திருப்பது வருத்தம் அளிக்கும் செய்தியாகும் ஒவ்வொரு மாதத்தின் உற்பத்தி குழு கூட்டத்திலும் சிறுதானியங்களுக்கு என கணக்கு வைத்திருக்கிறார்கள். இதை கணக்கு எடுப்பதற்கு வேளாண்மை துறையில் உதவி வேளாண்மை அலுவலர்கள் இருக்கிறார்கள். அதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக்கூடிய வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள் இவர்களுக்கு தெரியாமல் விவசாயம் யாரும் செய்து விட முடியாது. இவர்களிடத்தில் அனைத்து கணக்கையும் வைத்துக்கொண்டு கொள்முதல் வரவில்லை என்றால் எப்படி வரும். ஆகவே வேளாண்மை துறையும் வருவாய்த் துறையும் முறையாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் எவ்வளவு பயிரிட்டு உள்ளனர் என்பதை கணக்கீடு செய்து உடனடியாக அவர்களுக்கு சிட்டாவையும் அடங்கலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *