தீபாவளி மறுநாள் அக்.25ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லவும், திரும்ப வரவும் ஏதுவாக அக்.22 முதல் 25 வரை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் அக்.25ம் தேதி பொதுவிடுமுறை அளிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அக்.22ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.