அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு தீர்ப்பில் அந்த 2 அம்சங்கள்.. இன்னமும் நம்பும் ஓபிஎஸ் கோஷ்டி! அதிமுக வழக்கு கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துவிட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். காரசார வாதம் இந்த வழக்குகளில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். ஆனால் முடிவுகள் வெளியிடக் கூடாது என்றும் மார்ச் 22ல் விசாரணை நடத்தி மார்ச் 24 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கடந்த மார்ச் 19ம் அன்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஏழு மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். தீர்ப்பளித்த நீதிபதி இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கில் இன்று காலை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்தார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பினரின் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மேல்முறையீடு இந்நிலையில், அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி குமரேஷ் பாபு இன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் சார்பில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர். Ads by தடை விதிக்க வேண்டும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுக பொதுக்குழு தீர்மான வழக்கு தீர்ப்பில் அந்த 2 அம்சங்கள்.. இன்னமும் நம்பும் ஓபிஎஸ் கோஷ்டி! அதிமுக வழக்கு கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துவிட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். காரசார வாதம் இந்த வழக்குகளில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். ஆனால் முடிவுகள் வெளியிடக் கூடாது என்றும் மார்ச் 22ல் விசாரணை நடத்தி மார்ச் 24 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கடந்த மார்ச் 19ம் அன்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஏழு மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். தீர்ப்பளித்த நீதிபதி இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கில் இன்று காலை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்தார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பினரின் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மேல்முறையீடு இந்நிலையில், அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி குமரேஷ் பாபு இன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் சார்பில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர். தடை விதிக்க வேண்டும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.