மனிதத்தன்மையற்ற தாக்குதல்.. அண்ணாமலை ஆவேசம்

ஜல்லிக் கற்களை திணித்து.. அந்தரங்க உறுப்பை மிதித்து.. மனிதத்தன்மையற்ற தாக்குதல்.. அண்ணாமலை ஆவேசம் சென்னை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை மனிதத்தன்மையற்ற முறையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் கடந்த 23 ஆம் தேதி சில புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பற்களை கட்டிங் பிளையரால் பிடுங்கியுள்ளார்.சென்னையில் தனி வீடு விற்பனைக்கு நீங்கள் நினைப்பதை விட மலிவாக இருக்கலாம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறுகையில் எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்காக போலீஸார் எங்களை அம்பை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது எங்களின் இரு கைகளையும் கட்டி போட சொன்ன அதிகாரி, எங்களின் பற்களை கற்களால் தட்டியும் கட்டிங் பிளையரை கொண்டும் பிடுங்கினார். Recommendedகூட்டமைப்பில் India சேர்ந்தாலும் சிக்கல்.. சேராவிட்டாலும் சிக்கல் பல்லை பிடுங்கி, உயிர்நாடியில் தாக்கி.. என்ன மனநிலை? பல்வீர் சிங்கின் பவரை புடுங்குங்க.. ராமதாஸ் ஜல்லிக் கற்கள் மேலும் எங்கள் வாயில் ஜல்லிக் கற்களை போட்டு வாயை பொத்தி கன்னத்தில் கடுமையாக தாக்கினார். மேலும் அந்த கற்கள் உதட்டில் கிழித்ததால் ரத்தம் நிறைய வந்தது. அப்போது அவர் எங்களை விடவில்லை. மேலும் எங்கள் உள்ளாடை தவிர மற்ற துணிகளை கழற்ற சொல்லி கடுமையாக தாக்கினார். மேலும் எனது தம்பி இருவரை விதைப்பையில் மிதித்து கொடுமைப்படுத்தினர். திருமணம் அவரால் இப்போது எழுந்து கொள்ள முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. இத்தனைக்கும் புதிதாக திருமணம் ஆனவர். நாங்கள் எத்தனையோ முறை சொல்லியும் அந்த அதிகாரி கேட்காமல் எங்கள் தம்பியின் அந்தரங்க உறுப்பை மிதித்தார். மார்பிலும் சரமாரியாக மிதித்தார் என பேட்டி கொடுத்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது: அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக் கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாயில் ஜல்லிக் கற்களை திணித்து பற்களை உடைத்து, வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும் 8 இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் அந்தரங்க உறுப்பையும் குரூரமாகத் தாக்கியதில் அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. தாக்குதல் குற்றம் எதுவாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல்துறையிடமிருந்தே பொதுமக்கள் பாதுகாப்பு தேடும் அவலம் மிகவும் வருந்தத்தக்கது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் காவல் நிலைய மரணங்களால், பொதுமக்கள், காவல்துறை மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில், இது போன்ற மனிதத் தன்மையற்ற தாக்குதல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தும். அண்ணாமலை கண்டனம் உடனடியாக திமுக அரசு, தகுந்த விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றம் செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, காவல் துறைக்கு அறிவுறுத்தவும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தனது தொடர் ட்வீட் மூலம் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *