ஷிண்டே-பட்னவிஸ் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சி,
நாக்பூர் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்து இருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியடைந்துள்ளது.

பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்து இருக்கிறது. பாஜகவின் எந்த ஒரு முடிவையும் நாக்பூரிடம் ஒப்புதல் பெற்றே எடுப்பதாக எதிர்க்கட்சி விமர்சிப்பது உண்டு.இப்படிப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். இன் அதிகார பலம் பொருந்த பகுதியான நாக்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

காங்கிரஸ் பெரும் வெற்றி

இதில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற்று பலரை வியக்க செய்து இருக்கிறது. நாக்பூர் மாவட்டத்தில் உள்ள 13 பஞ்சாயத்து தலைவர் இடங்களில் 9 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்று உள்ளது. நாக்பூர் கிராமின், கம்தி, சவனெர், கலமேஷ்வர், பர்ஷிவானி, உம்ரெட், மௌடா, குஹி, பிவாபூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 பஞ்சாயத்தை தலைவர் இடங்களில் வெற்றியை பதிவு செய்து உள்ளது. அந்த கட்சி நார்கெட் மற்றும் கடோல் ஆகிய இடங்களில் வென்று இருக்கிறது. மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா 13 பஞ்சாயத்து தலைவர் இடங்களில் ராம்டெக் என்ற ஒரு இடத்தில் மட்டுமே வெற்றியை பெற்று உள்ளது.மத்தியில் ஆளும் கட்சியாகவும், மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்று உள்ள பாரதிய ஜனதா அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவர்களாக இருந்த குஹி மற்றும் கம்தி ஆகிய இடங்களையும் இம்முறை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது

இந்த தேர்தலில் போட்டியிட்ட நாக்பூர் மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குல்லேவும் படுதோல்வியை தழுவியுள்ளார். ஒரு தலைவர் பதவியை கூட கைப்பற்றாத அக்கட்சியை 2 இடங்களில் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மறுபக்கம் தொடர் தோல்வியை தழுவி வந்த காங்கிரஸ் இதில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று இருக்கிறதுமகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை குதிரை பேரம் மூலம் உடைத்த பாஜக, சிவசேனா அமைச்சராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியை உருவாக்கி, உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து, பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்த நிலையில் நாக்பூர் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *