விருதுநகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு நீர்;ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான தொழில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் கருத்து பரிமாற்றக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப, அவர்கள் துவக்கி வைத்தார்.
——
விருதுநகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு நீர்;ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான தொழில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் கருத்து பரிமாற்றக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப, அவர்கள் துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு நீர்;ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாற்று சந்தைகளை ஊக்குவிக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து, பரந்த சந்தை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு ஆதரவை பெறுவதற்காகவும், விற்பனை திறனை மேம்படுத்தவும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் நிறுவப்பட உள்ளது. இத்திட்டம், விவசாயிகளின் மேலாண்மை திறனை வலுப்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குவதற்கான புதுமையான உத்திகள், ஆய்வுகள் ஆகியவற்றை வேளாண் வர்த்தக ஊக்குவிப்பு ஆலோசனை வசதி மூலமாக அளிக்க உதவுகிறது.
தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் 2017-18 முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.2.76 கோடி திட்ட மதிப்பீட்டில் கௌசிகா உபவடி நீர்;பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
விவசாயிகள் சந்தை அணுகுதலை மேம்படுத்துதல், வேளாண் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், நிறுவன மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விவசாயம் மனிதர்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் விவசாய துறையில் வந்து விட்டன. விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்யும்போது அதிகம் லாபம் பெற முடியும். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மனிதர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருகிறது.
வீட்டில் சமைப்பதை காட்டிலும், உணவு தயாரிப்பவர்களிடமிருந்து வீட்டிற்கே உணவுகளை பெற்று உண்ணும் பழக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்ப சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் காரணத்தினாலும், சமைப்பதினால் ஆகும் செலவை விட, சந்தையில் உள்ள உணவின் செலவு குறைவாக இருப்பதாலும், எளிதாகவும், விரைவாகவும், சமைக்க மற்றும் உண்ணக்கூடிய உணவுப்பொருட்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இன்னொரு சந்தை வாய்ப்பு என்பது வாழ்க்கை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நோய்களை ஒட்டிய உணவுப்பழக்க வழக்கங்கள். தற்போது மனிதர்களின் வாழ்வியல் மாற்றங்களினால் ஏற்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக சிறுதானிய உணவுகள்,காய்கறிகள் உள்ளிட்டவைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதிலும் சந்தை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே, மாறி வரக்கூடிய வாய்ப்புகளில், வாழ்க்கை முறைகளில் விவசாயிகளுக்கு மிக பெரிய சந்தைகள் இருக்கின்றன. இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றன. அதனை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து சந்தை படுத்தி அதிக லாபம் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ,ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முன்னதாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ,ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.உத்தண்டராமன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) முனைவர் ரமேஷ், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ராதாகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரு.ராமகிருஷ்ணன், மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் ராஜா பாபு, விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் திரு.வேலுச்சாமி, மண்டல வேளாண் வணிக நிபுணர் (KPMG, Chennai) திரு.சுந்தரவதனம், செல்கோ பவுண்டேசன் திரு.நம்பிராஜன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.
வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு நீர்;ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல்
