வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ராக்கெட்

சிறிஹரிகோட்டா

இஸ்ரோ’வின் ஜி.எஸ்.எல்.வி., மாக் – 3 வகையை சேர்ந்த எல்.வி.எம்.3 – எம்2 ராக்கெட், இங்கிலாந்தை சேர்ந்த ‘ஒன்வெப்’ நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி, காலை 12:07மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு, செயற்கைக் கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்துகிறது.

 

அந்நிறுவனம், வணிக ரீதியில் வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் செலுத்துகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, ‘ஒன்வெப்’ நிறுவனம் 36 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது.

 

அந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி., மாக் – 3 வகையை சேர்ந்த எல்.வி.எம்.3 – எம்2 ராக்கெட் இன்று 12:07க்கு விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர ‘கவுன்ட் டவுன்’ நேற்று நள்ளிரவு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.