வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்பு .

கோடை காலம் தொடங்கிவிட்டது. சித்திரை பிறக்கும் முன்பே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் முதல் ஜூலை வரை கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது. ஒரு பக்கம் வியர்வையின் பாதிப்பு… மறுபக்கம் வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்பு என இந்த கோடை காலத்தில் நாம்   அதே சமயம் நம்முடைய உடலிலும் வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது இந்த எட்டு விஷயங்களை நாம் கண்டிப்பாக செய்யக்கூடாது. அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

1.கோடை காலத்தில் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் போடாமல் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியாமல் சென்றுவிடாதீர்கள். இல்லாவிட்டால், அது சருமத்தை மோசமாக பாதித்து, சரும நிறத்தை கருமையாக்கிவிடும்.

2.கோடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை இன்னும் அதிகரித்து வெப்ப வாதத்தின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

3.அடர் நிறங்களில் ஆடைகள் அல்லது மிகவும் இறுக்கமான ஆடைகளை கோடை காலத்தில் அணியாதீர்கள். இல்லாவிட்டால், அந்த ஆடைகள் வெப்பத்தை தக்கவைத்து, உடல் சூடு பிரச்சனையை அதிகரித்துவிடும்.

4.கோடை காலத்தில் எங்கு வெளியே சென்றாலும் நீர் கொண்டு செல்ல மறந்துவிடாதீர்கள். மற்ற காலங்களை விட கோடையில் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் வறட்சியால் அவதிப்பட நேரிடும். தேவைப்பட்டால் பழச்சாறுகளும் எடுத்துக் கொள்ளலாம்

5.வயிறு நிறைய மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் மந்தத்தை அதிகரிக்கும்.

6.வெளியே வெயிலில் செல்லும் போது தொப்பி, சன் ஸ்க்ரீன் கண்ணாடி போன்றவற்றை அணிய தவறக்கூடாது.

7.வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் தான் வெளியே செல்ல வேண்டும். சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகளவில் படுமானால், அது சரும புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

8.வெயில் அதிகமாக உள்ளது என்று வீட்டின் ஜன்னல்களை அடைத்துக் கொண்டு இருப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே வீட்டினுள் வெப்பத்தை அதிகரிக்கும். காற்றோட்டமாக இருக்கும் வீடுகளில் வசிப்பது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *