வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.03.2022) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, சாத்தூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தையும் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு வரும் கட்டடதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, சாத்தூர்- வெம்பக்கோட்டை சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு இடம் தேர்வு செய்யும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, சாத்தூர் கோட்டாட்சியர் திருமதி அனிதா, சாத்தூர் நகர்மன்றத் தலைவர் திரு.குருசாமி, நகராட்சி ஆணையாளர் திரு.இளவரசன், வட்டாட்சியர் திரு.வெங்கடேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *