விருதுநகர் மாவட்டம்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் மற்றும் சடையம்பட்டி ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.5.61 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் தள பணிகளையும், கே.கே.நகர் பகுதியில் ரூ.11.56 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், சடையம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.3.58 இலட்சம் மதிப்பில் சுற்று கம்பி வேலி அமைத்தல் மற்றும் நீர் ஆதாரம் அமைத்தல் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, சாத்தூர் கோட்டாட்சியர் திருமதி அனிதா, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
