விருதுநகர் மாவட்டம்
வேளாண் அடுக்கு (AGRI STACK) மற்றும் GRAINS வலைதளத்தில் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்;-
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தகவல்
—
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மூலம் 01.04.2023 முதல் செயல்படுத்தப்படவுள்ள ஒன்றிய அரசின் மிக முக்கியமான திட்டமான வேளாண் அடுக்ககம் (AGRI STACK) மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விபரம், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விபரம் – இனங்களை குறித்து அறிந்து கொள்ள இயலும்.
இதில் முக்கியமாக நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விபரம் அறிந்திட உருவாக்கப்பட்டுள்ள GRAINS வலைதளத்தில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, குடிமைப்பொருள்; வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடைப் பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட்டுள்ளதால் அரசு திட்டங்களின்; நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.
மேலும் இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன் பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் தாங்களே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் அரசு திட்டங்கள் மூலம்; பயன் பெறலாம்;. விவசாயிகள் தாங்கள் இது வரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம். திட்டங்களின் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் GRAINS வலைதளத்தில் தங்களது ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்.
AGRISTACK/GRAINS Project – தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் விவசாயிகள் தரவு தளத்திற்கான சேகரிப்பு தொடர்பாக விருதுநகர்; மாவட்ட அனைத்து வட்டாட்சியர்கள், மின்னணு மாவட்ட மேலாளர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோருக்கு வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளம் பற்றி மாவட்ட அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு, மாவட்ட அளவிலான பயிற்சி பெற்ற அலுவலர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை சார்ந்த களப்பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு பதிவேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது விபரங்களை தங்களது கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் மூலம் வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்; முனைவர்.வீ.ப.ஜெயசீலன் கேட்டுக்கொள்கிறார்.