விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்கநிலை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்கநிலை வளைகோல்பந்து ((Hockey) ) பயிற்சிக்கான SDAT- விளையாடு இந்தியா மாவட்ட மையம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் 30-100 விளையாட்டு வீரர்ஃவீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட வளைகோல்பந்து வீரர்ஃ வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.25000ஃ- வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்குரிய விண்ணப்பத்தை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் 03.04.2023 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு விருதுநகர் விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டு திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *