அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது என தெரிவித்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசுப்பள்ளியின் கட்டமைப்புகளையும், கல்வித்தரத்தையும் எடுத்துரைக்கும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் தொடக்கி வைத்தனர்.
விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு – அன்பில் மகேஷ்
