வாரிசு நடிகர் ‘தளபதி’ விஜய் நடிப்பில் சமீபத்தில் 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வெளியான திரைப்படம். இப்படம் ஏப்ரல் 14 ‘சித்திரை திருநாள்’ முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த வாரிசு திரைப்படம் அதிக டி.ஆர்.பி பெற்று முன்னிலை இடத்தை அடையுமா?, முழு விவரங்கள் இதோ.வாரிசு – தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வெளியான திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குனர் வம்சி தோழா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பலர் மத்தியில் பிரபலமானவர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தினை தயாரிக்க, நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தினை தயாரித்த ‘7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் இணைந்து இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்பட தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம். ஒரு அழகான குடும்ப பின்னணி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் சினிமா & தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமானது.வாரிசு திரைப்படம் உலகளவில் மொத்தம் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வாரிசு திரைப்படம் ஒரு வெற்றி படமாக இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பல மேடைகளில் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.விஜய் – ராஷ்மிகா, சரத் குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், சங்கீதா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்கில் இப்படம் படைத்த பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 14, 2023 சித்திரை திருநாள் மற்றும் சன் தொலைக்காட்சியின் பிறந்தநாள் முன்னிட்டு இப்படம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.நடிகர் விஜய்யின் முந்திய திரைப்படங்களான சர்கார், பிகில் மற்றும் பைரவா ஆகிய திரைப்படங்கள் டி.ஆர்.பி-யில் முக்கிய இடங்களில் உள்ளது. இப்படங்களை தொடர்ந்து நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் டி.ஆர்.பி-யில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.2023 ஏப்ரல் 14ல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வாரிசு திரைப்படம் டி.ஆர்.பி சாதனை படைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சன் தொலைக்காட்சி ஏப்ரல் 14ல் தேதி தொடங்கப்பட்டுள்ளது. சன் டிவியின் பிறந்தநாள் முன்னிட்டு வாரிசு படம் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் மற்ற தொலைக்காட்சிகளில் அநேரம் எந்த ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதற்கு வாய்ப்பில்லை. ஆக வாரிசு நிச்சியம் டி.ஆர்.பி சாதனை படைக்கும்.
வாரிசு திரைப்படம் சித்திரை திருநாள்’ முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
