சந்திரமுகி 2 படப்பிடிப்பின் போது இயக்குநர் வாசுவிற்கும் வடிவேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை அடுத்து படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து, ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார்.இந்த படம் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியது.நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அழுத்தமான கதைக்களத்தை கொண்ட மாமன்னன் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வடிவேலு உதயநிதியின் அப்பாவாக நடித்துள்ளார்.இந்த படத்தைத் தொடர்ந்து, சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் பி வாசுக்கும் வடிவேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வடிவேலு, படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததுமே, சீக்கிரம் சீக்கிரம் என்று அலப்பறை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், என் காட்சியை முதலில் எடுத்துவிடுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்ததால், இயக்குநர் பி வாசு கடுப்பாகி நீ நடிக்கவே வேண்டாம் போ என கத்தியதாக கூறப்படுகிறது.ஏற்கனவே வடிவேல் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களை மதிப்பது இல்லை என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், இயக்குநருடன் மோதல் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் பலர் வடிவேலுக்கு நேரமே சரியில்லை என புலம்பி வருகின்றனர். மேலும்,சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை வடிவேலு முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசுவிற்கும் வடிவேலுக்கும் இடையே மோதல்
