இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, வாக்காளர் அடையாள
அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகிற 31.03.2023
அன்றுடன் முடிவடைய உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும்
மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நடைமுறை தற்பொழுது நிறுத்தி
வைக்கப்படடுள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ள
பழைய வாக்காளர் அட்டையினை மாற்றுவதற்கோ, வாக்காளர் அடையாள அட்டை சேதம்
அடைந்திருந்தாலோ அல்லது மாற்று அடையாள அட்டை வாங்குவதாக இருந்தாலோ படிவம்
8 – ஐ பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் துணை
வட்டாட்சியரிடமோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ நேரிடையாக படிவத்தை
வழங்கலாம். நேரில் வழங்க முடியாத வாக்காளர்கள் NVSP Portal என்ற இணையதளம்
மற்றும் Voters Helpline என்ற App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களுக்கு
அவர்களது வாக்காளர் அடையாள அட்டையானது விரைவு அஞ்சல் மூலமாக கட்டணமின்றி
வாக்காளர்களின் முகவரிக்கே வந்தடையும்.
இதுநாள் வரை வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை
வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காதிருந்தால், வாக்காளர்கள் தங்களது
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை
இணைப்பதற்கென பிரத்யேகமான சிறப்பு முகாம் எதிர்வரும் 26.03.2023 (ஞாயிற்றுக்
கிழமை) அன்று அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில்
நடைபெறவுள்ளது. பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்
மற்றும் மொபைல் எண் பொன்ற விவரங்களை படிவம் 6B – இல் பூர்த்தி செய்து சிறப்பு முகாம்
நடைபெறும் வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம்
வழங்கலாம். சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் வட்டாட்சியர் அலுவலகம்
இயங்கக்கூடிய நாட்களில் அலுவலக வேளை நேரத்தில் அதாவது காலை 10.00 மணி முதல்
மாலை 05.45 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் துணை
வட்டாட்சியரிடம் படிவம் 6B – இல் பொது மக்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல்
எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை வழங்கலாம். படிவம் 6B – ஐ
பூர்த்தி செய்து நேரில் வழங்க முடியாத வாக்காளர்கள் NVSP Portal என்ற இணையதளம்
மற்றும் Voters Helpline என்ற App மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார்
எண்ணை இணைத்திடலாம்.
வாக்காளர்கள் தங்களது மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன்
இணைப்பதன் மூலம் மொபைல் எண் வழியே e-EPIC அதாவது மின்னனு வாக்காளர்
அடையாள அட்டையினை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட
தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்