நிதியாண்டு இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் வருமான வரி செலுத்துவோர் முடிக்க வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்பான் எண் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் காலக்கெடு-வை ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை வருமான வரித்துறை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜூலை 1, 2023 முதல் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதை தாண்டி மார்ச் 31 குள் செய்து முடிக்க வேண்டிய விஷயம் பல உள்ளது.வருமான வரி செலுத்துவோர் மார்ச் 31, 2023 தேதிக்குள் வரி சேமிப்புக்கான திட்டங்களில் முதலீடுகளை செய்ய வேண்டும். அதன்மூலம் 80C மற்றும் 80D போன்ற பிரிவுகளின் கீழ் வரி செலுத்துவோர் வரி விலக்கு பெற முடியும்.வருமான வரிப் பிரிவு 80C இன் கீழ், நீங்கள் ELSS என்றும் அழைக்கப்படும் – வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள், ஆயுள் காப்பீடு பாலிசிகள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,50,000 வரி விலக்குக் கிடைக்கும்.இதை மார்ச் 31 ஆம் தேதிக்குள் முதலீடு செய்து முழுமையாக சலுகை பெற இதுவை கடைசி நேரம்.
வரி செலுத்துவோர் 2022-23 நிதியாண்டுக்கான முன்பண வரியில் 100 சதவீதத்தை மார்ச் 15, 2023க்குள் செலுத்த வேண்டும். மார்ச் 15க்குள் நீங்கள் முன்கூட்டியே வரியைச் செலுத்தவில்லை என்றால், மார்ச் 31, 2023க்குள் அதைச் செலுத்த வேண்டும். TDS/TCS மற்றும் MAT ஆகியவற்றைக் கழித்த பிறகு, அதன் வருடாந்திர வரிப் பொறுப்பு ரூ. 10,000க்கு மேல் இருந்தால், நான்கு தவணைகளில் முன்கூட்டிய வரியைச் செலுத்த வேண்டும்.
ஒருவேளை இந்த முன்கூட்டியே வரி செலுத்தத் தவறினால், வரி செலுத்துபவர் 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 234B மற்றும் 243Cன் கீழ் அபராதங்களைச் சந்திக்க நேரிடும்
EV வாகனங்கள்!
வருமான வரிச் சட்டத்தின் 80EEB பிரிவின் கீழ், எலக்ட்ரிக் வாகனம் வாங்குவதற்காக நீங்கள் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பலன்களைப் பெறலாம்.
இருப்பினும், கடன் வழங்குபவர் மற்றும் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பான சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 80EEB விலக்கைப் பெற வேண்டும்.
வரி செலுத்துவோர், 2019-20 நிதியாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை எனில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதை செய்து முடிக்க வேண்டும்.
ஏப்ரல் 1, 2023 முதல், வரி செலுத்துவோர் தங்கள் சொந்த வருமானம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானத்தில் செலுத்த வேண்டிய வரி விகிதங்களில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மேலும் புதிய வருமான வரி முறையானது 1 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயரும்.