ரூ.54 கோடி மதிப்பில் 7 கி.மீ இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக பணிகள் முடிவுபெற்றுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் காஞ்சிபுரம் (நெ) கட்டுமானம் மற்றும்
பராமரிப்பு அலகில் புக்கத்துறை – உத்திரமேரூர் சாலை மாண்புமிகு முதலமைச்சர் சாலை
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ரூ.54 கோடி மதிப்பில் 7 கி.மீ
இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான
பணிகள் நடைபெற்று வருவதை இன்று (25-03-2023) செங்கல்பட்டு மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் உத்திரமேரூர்
சட்டமன்ற உறுப்பினர் திரு.சுந்தர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு
பொதுபணித்துறை மறறும் நெடுஞ்சாலை சிறுபாலங்கள் துறை அமைச்சர் திரு எ.வ.வேலு
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் காஞ்சிபுரம் (நெ) கட்டுமானம்
மற்றும் பராமரிப்பு அலகில் புக்கத்துறை – உத்திரமேரூர் சாலை மாண்புமிகு முதலமைச்சர்
சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ரூ.54 கோடி மதிப்பில் 7 கி.மீ
இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர;த்தப்படுவதற்கான
பணிகள் நடைபெற்று வருவதை இன்று (25-03-2023) செங்கல்பட்டு மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில மாண்புமிகு
பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலை சிறுபாலங்கள் துறை அமைச்சர் திரு.
எ.வ.வேலு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலை சிறுபாலங்கள் துறை
அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு
சாலைகள் நான்கு வழிசாலையாக மாற்றினால் தான் விபத்துகளை குறைத்து வாகனங்கள்
விரைந்து சென்று இலக்குளை அடைய முடியும், என்ற நோக்கில் 2021-2022 காலத்தில்
252 கிலோமிட்டர் சாலை பணிகள் 2500 கோடி ரூபாயில் 32 பணிகள்
மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 2022-2023-ம் ஆண்டில் 150 கிலோமீட்டர் சாலை
பணிகளை 23 இடங்களில் 1406 கோடியில் திட்டமதிப்பு செயல்படுத்தப்படுகிறது.
2021-2022 திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம்
(நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் புக்கத்துறை உத்திரமேரூர் சாலை
(எஸ்.எச்.118) கி.மீ 0/0-31/8 வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை
இரு வழி தடமாக உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்
2021 – 2022 ஆம் ஆண்டு 5435 இலட்சம் மதிப்பில் கி.மீ 0/0 – 3/6 மற்றும் 14/2-18/6 வரை
இருவழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல் மற்றும்
உறுதிபடுத்துதல் பணி சிறு பாலங்கள் ரூபாய் 4723.31 இலட்சம் மதிப்பில் பணிகள்
நடைபெற்று முன்னேற்றத்தில் உள்ளது.
மேலும் காஞ்சிபுரம் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் புக்கத்துறை –
உத்திரமேரூர் சாலை பணியின் தற்போதைய நிலை (மொத்த நீளம் : 7.20 கி.மீ) பணிகள்

முடிவுபெற்றுள்ளது. 579/579 111-120, 1820/1920, 23-23 கி.மீ 1/2-3/6 (இடது புறம்)
WMM பணி முடிவடைந்தது. கி.மீ 1/2 – 3/6 (வலது புறம்) GSB பணி முடிவடைந்தது. கி.மீ
0/0-1/2 வரை மற்றும் கி.மீ 14/6-18/2 வரை 30.00 கோடி மதிப்பீட்டில் இருபுறமும் DBM
பணிகள் முடிவுபெற்றுள்ளன. தற்போது நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் (ம)
பராமரிப்பு அலகு காஞ்சிபுரம் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் 32 கி.மீ
(புக்கத்துறை – உத்திரமேரூர; சாலை) பராமரிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு
முதலமைச்சர் சாலை மேம்பாட்டு 16.12.2021-ன்படி திட்டத்தின் கீழ் 2021 2022 ஆம்
ஆண்டு ரூ.54 கோடி மதிப்பில் 7 கி.மீ இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக
தரம் உயர;த்தப்பட்டு 75 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. இப்பணி மே 2023க்குள்
முடிவடையும். ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2022- 2023 ஆம்
ஆண்டு உத்திரமேரூர; நெடுஞ்சாலை மேம்பாடு செய்தல் ரூ.25 கோடி மதிப்பில் பணிகள்
நடைபெற்று வருகிறது. எஞ்சியிருக்கின்ற நிதி நிலைக்கேற்ப இந்த திட்டங்களை மாநிலம்
முழுவதும் நிறைவேற்றி வருகின்றோம் பொதுவாக முதலமைச்சர் என்ன கருதுகிறார்
என்று சொன்னால் தமிழகத்தில் விபத்துகளை குறைக்க வேண்டும், மேலும் விபத்துகளை
குறைக்க வேண்டுமென்றால் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் . ஆகையால்
இன்றைய தினத்தில் நானும் ,மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்
சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். சாலையை விரிவு படுத்துகின்ற பொழுது
சில இடங்களில் தவிர்க்க முடியாத மரங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஒரு மரங்களை எடுத்தால் அதற்கு பதிலாக 10 மரங்கள் நட வேண்டும் என்று தமிழக
முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார் எனவே இந்த பணிகள் முடிந்தவுடன் இருபுறமும்
ஒரு மரத்துக்கு பதிலாக பத்து மரங்களை நடும் பணிகள் துறையின் சார்பாக
மேற்கொள்வோம். பசுமையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள்
எண்ணமாக உள்ளது என்று மாண்புமிகு பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலை
சிறுபாலங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை
பொறியாளர் திரு.சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி. செம்பருத்தி
துர்கே ஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *