இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று(22ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஏழை-எளியோருக்கு இறைச்சி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி, வீடுகளில் பிரியாணி சமைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி கொண்டாடுவர். ரம்ஜானையொட்டி, தமிழகம் முழுவதும் நடந்த சந்தையில் சுமார் ரூ.25 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ரூ.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை
