டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தி லண்டனில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் பாஜக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கடந்த பிப். 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இரு அமர்வுகளாக நடைபெறுகிறது.அதாவது, லண்டன் சென்ற ராகுல் காந்தி அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன் நாடாளுமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ராகுல் காந்தி சொன்ன கருத்துகள் இந்தியாவை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பாஜக தொடர்ந்து சாடி வருகிறது. ராகுல் காந்தி லண்டனில் பேசியது இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்றும், இதற்காக ராகுல் காந்தி மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.அப்படி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை என்றால்… அவரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் இது குறித்து விசாரிக்கக் குழு அமைக்க வேண்டும் என்றும் பாஜக எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாஜக எம்பிகள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். முன்னதாக ராகுல் காந்தி, தனது பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கத் தன்னை அனுமதிக்குமாறு ராகுல் காந்தி நேற்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறுகையில், “ராகுல் காந்தி கூறிய அவமதிப்பு கருத்துகள் குறித்து விசாரிக்க, அலுவல் நடத்தை விதி 223இன் கீழ் சிறப்பு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும்.. நாட்டின் உயர் நிறுவனங்களின் மரியாதையை யாரும் இதுபோல அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை சபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டுமா என்பதை இந்த குழு பரிசீலிக்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக 2008இல் குழு அமைத்ததை போலவே இப்போதும் குழு அமைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி லண்டனில் பேசியது இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்
