ரம்ஜான் இலவசம் பெற சென்ற போது விபரீதம்: ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி .

ஏமன் நாட்டில் ரம்ஜான் இலவசம் பெற சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சானா, நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கென ஏமன் நாட்டில் உள்ள சானா நகரில் உள்ள ஒரு பள்லியில் இலவச உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலவசம் என நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கூடியதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் ஒரு பகுதியில் எலக்ட்ரிக் ஷாக் அடிப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து மக்கள் அங்கிருந்து சிதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் பலரும் கிழே விழுந்ததால் நெரிசலில் சிக்கி 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *