மொழியியல் துறை அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழியியல் துறையில் மாண்பமை
துணைவேந்தர் தலைமையில் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியமநினைவு அறக்கட்டளை, கிருஷ்ணசாமி இராசம்மாள் நினைவு
அறக்கட்டளை, டாக்டர் நீதிபதி மகாராசன் நினைவு அறக்கட்டளைச்சொற்பொழிவுகள் நடைபெற்றது. இதில் அண்ணாமலைப்
பல்கலைக்கழகம், மொழியியல் உயராய்வு மையத்தின், மேனாள்இயக்குநர், இந்திய மொழிப்புலத்தின் தலைவர், பேராசிரியர்
சு.நடனசபாபதி அவர்கள் தாமிழ் ஆய்தம் – மீள்பார்வை, முனைவர்பூ.விஜயா தமிழ்மொழியை இரண்டாம்மொழியாகக் கற்கும்
மாணவர்களின் பிழையும் தீர்வும், மதுரை காமராசர் பல்கலைக்கழகபேராசிரியர் இரா.குமாரசாமி தொல்காப்பியமும் வட்டார வழக்கும் என்றதலைப்புகளில் உரையாற்றினார்கள். இக்கருத்தரங்கில் பேராசிரியர்அ.காமாட்சி, முதுநிலை ஆய்வுத்தகைஞர் ம.சிவசண்முகம், தகைசால்பேராசிரியர் அரங்கன், தகைசால் பேராசிரியர் முதுமுனைவர்மா.இராசமாணிக்கம், நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் காமராசு,கி.பொருமாள், மக்கள் தகவல்தொடர்பு அதிகாரி முருகன் மற்றும்ஆய்வாளக்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மொழியியல்துறைத்தலைவர் பேராசிரியர் ப.மங்கையற்கரசி வரவேற்புரைக் கூற,நிறைவாக முனைவர் மா.ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
மொழியியல் துறை அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
