திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 4ம் தேதி இரவு 11.58 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 11.35 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 5ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமியன்று சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில், 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் 1,600 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
மே 5ல் சித்ரா பவுர்ணமி திருவண்ணாமலைக்கு 1,600 சிறப்பு பஸ்
