நமது பொது நிருவாகத்தில் மிக முக்கியப் பங்காற்றும் குடிமைப்
பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய குடிமைப் பணிகள் நாளில் எனது
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் எஃகுச் சட்டகம் எனப் பொருத்தமாக அழைக்கப்படும்
அவர்கள் அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதிலும், மக்களின்
நலனுக்கும் நாட்டின் நலனுக்கும் பங்காற்றுவதிலும் முழுமையாகத்
தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அரசுப்பணி ஆற்றுகின்றனர்.