சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் – தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துதல் தொடர்பாக நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறையாது வெளியீடப்பட்டுள்ளது. இதில் காலை உணவு திட்டம் என்பது முதல் கட்டமாக மாநகட்சி, நகராட்சி, கிராம் ஊராட்சி பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரை திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 2023-2024ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அதை எவ்வாறு விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், மாணவர்கள் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்ய வலியுறுத்தல். பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய வலியுறுத்தல். மாணவர்கள் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைப்பாட்டினை நீக்க குறிக்கோள். அனைத்து வகை தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.